அரசாங்கம் எங்களை ஏமாற்றி விட்டது!

1 d
1 d

எங்களால் எதிர்பார்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் தற்போது நாங்களே வெறுப்படையும் வகையில் எங்களை விமர்சிக்கின்றதென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

“கட்சியில் உறுப்பினர்களுக்கு அரச பொறுப்புக்கள் பெற்றுக்கொடுக்கும்போது, இடமாற்றம் வழங்கும்போது பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று மாகாண சபையில் சேவையில் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாறு விலக்கப்பட்டவர்களுக்கு பதிலாக அனுபவமற்றவர்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை எமது தரப்பினர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவதன் காரணமாக கட்சி ஆதரவாளர்களிடேயே பெரும் சிக்கல்கள் தோன்றியுள்ளன. எனவே இவ்விடயங்கள் தொடர்பாக வெளிப்படையாக கலந்துரையாட வேண்டும்.

எமது கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு வாக்களிக்க கூடாதென கூறப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு எதிராக ஐ.தே.க.செயற்படும்போது, எம்மையும் எதிரானவர்களாக பார்க்கின்றார்கள்.

இவ்வாறு பெரும்பாலான பிரச்சினைகள் காணப்படுகின்றது. ஆனால் எமது கட்சியை விமர்சிப்பதையே பெரும்பாலான அமைச்சர்கள் முதன்மையான விடயங்களாக கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் நாட்டில் முக்கிய பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துவது கிடையாது.

அந்தவகையில் எங்களால் எதிர்பார்ப்புடன் ஏற்படுத்தப்பட்ட அரசாங்கம் தற்போது எங்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.