வீட்டுக்குள் முடங்கும் போராட்டம்!

2 ad
2 ad

கொரோனா தோற்றிய வெளிநாட்டு பிரஜைகள் மட்டக்களப்பு மாவட் ட பல்கலைக்கழகத்தில் தங்கவைப்பதை எதிர்த்து தமிழ் உணர்வாளர் அமைப்பு வீட்டுக்குள் முடங்கும் போராட்டம் ஒன்றை நாளை மறுதினம் நடாத்த உள்ளது .


இந்த போராட்டத்துக்கு அனைவரையும் ஆதரவு வழங்கும்படியும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது .

தென் கொரியாவில் இருந்து நாடு திரும்பிய 166 பேர் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கொரோனா தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் இன்று காலை நாடு திரும்பிய நிலையில், இவ்வாறு மட்டக்களப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இலங்கைக்கு வந்த 166 பேரில் 164 பேர் இலங்கையர்கள் எனவும் 2 பேர் கொரியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது

கொரோனா தனிமைப்படுத்தல் மையங்களாக வத்தளை, ஹெந்தலை பகுதியிலுள்ள தொழுநோய் வைத்தியசாலை, கந்தக்காடு புனர்வாழ்வு மையம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .