அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட சிகிச்சை பிரிவு

1 Hospital
1 Hospital

அதிகார உயர்மட்டத்தின் அவசர கடுமையான பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்று நோய் சிகிச்சைப் பிரிவு இன்று
அவ்வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவை அண்டியதாக கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்று நோய் சிகிச்சைப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டரங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை அந்த சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்றக் கூடிய வகையில் வைத்தியர்கள், தாதியர்கள், மற்றுமுள்ள ஊழியர்களையும் நியமிக்குமாறு அதிகார உயர்மட்டம் பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஏற்கெனவே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் ஆளணி, பௌதீக நவீன போதிய வைத்திய வசதிகளின்றி தடுமாறி வரும் நிலையில் மட்டக்களப்பிற்கு வலிந்து கொரோனா சம்பந்தப்பட்ட விவகாரத்தை கொண்டு வந்திருப்பதும் நெருக்கடியை உருவாக்கியிருப்பதும் கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

இதனிடையே சந்தேகிக்கப்படும் கொரோனா தொற்றாளர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டாமெனக் கூறும் எதிர்ப்புக்கள் சட்டத்தரணிகள் தொடக்கம் சமூகமட்டத்திலும் எழுந்து ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.