கொரோனா – ஆய்வுப்பணியில் ஈடுபட்ட பேருந்துக்கு நடந்த சோகம்

79
79

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ ஆய்வுக்காக பயன்படுத்தபட்ட பேருந்து ஒன்று இன்று காலை கெகிராவை பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வவுனியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்று மீண்டும் திரும்பிவரும் போதே குறித்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது சாரதி மாத்திரமே பேருந்தில் இருந்துள்ளதுடன், அருகிலிருந்த மின் கம்பம், தொலைபேசி கம்பம் ஒன்றின் மீது பேருந்து மோதியதால் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பேருந்தின் மூலம் கொரியாவிலிருந்து வந்த 36 பேர் வவுனியா பம்மைமடு பிரதேசத்திலிலுள்ள தனிமைப்படுத்தபட்ட ஆய்வு மையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.