கொரோனா பரவ யார் காரணம்? சர்வதேச விசாரணை வேண்டும் – பேராயர் வலியுறுத்து

7 c
7 c

கொரோனா வைரஸ் பரவுவதற்கான காரணம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் இன்று காலை நடைபெற்ற கத்தோலிக்க ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர், அப்பாவிப் பொதுமக்களின் வாழ்க்கையுடன் சக்தி வாய்ந்த நாடுகளை விளையாட அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

“இயற்கையைப் பரிசோதித்ததன் விளைவாகவே கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றது. இது குறித்து ஆராயப்பட வேண்டும். இந்த வைரஸ் பரவுவதற்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

அதன் பரவலுக்குக் காரணமானவர்களை ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச சமூகமும் தண்டிக்க வேண்டும்இனிமேலும் இயற்கை வளங்களைப் பரிசோதிப்பதைத் தடைசெய்ய வேண்டும்” என்றும் பேராயர் வலியுறுத்தினார்.