பொய் சொல்கிறது சீனா – உள்ளூர் ஊடகத்தில் வெளியான பகீர் தகவல்

china23
china23

கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடு, மற்றும் முதலில் பாதிப்பை எதிர்கொண்ட நாடு சீனா.

ஆனால் தற்போது அங்கு சில பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும், மக்கள் வழக்கம் போல பணிகளுக்கு செல்வதாகவும், சீன அரசு தரப்பு தெரிவிக்கிறது.

ஆனால், இதில் மோசடி இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வூஹான் மாகாணத்தில், கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியபோதே, அதுகுறித்த வெளிப்படைத் தன்மையை சீனா பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த வைரஸின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை கட்டுப்படுத்த எந்த மாதிரி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது பற்றி எல்லாம் சீன அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இதன் காரணமாகத்தான், உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் விஷயத்தில் மிகவும் தாமதமாக உலகநாடுகளுக்கு எச்சரிக்கை பிறப்பித்தது. அதற்குள்ளாக அது, இத்தாலி, ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது.

இந்த நிலையில்தான், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக வுஹான் மாகாணத்தை வெளி தொடர்புகள் இன்றி துண்டித்து வைத்திருந்தது அந்த நாட்டு அரசு.

தற்போது, புதிய வைரஸ் பாதிப்புகள் எதுவும் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியிருப்போரிடம் சொற்ப அளவில் புதிதாக நோய் தாக்கம் கண்டறியப்பட்டு வருகிறது என்றும் சீனா தெரிவித்துள்ளது.