அடாவடியாக செயற்பட்டு வடக்கு வாக்குகளை பெற முடியாது: வடக்கு ஆளுனர்!

Suren Ragavan thattungal.com
Suren Ragavan thattungal.com

நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடல் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது நீதித்துறைக்கும், ஜனநாயகத்திற்கும் விழுந்த பேரிடி என வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் வடமாகாண ஆளுனரின் உப அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

இது தேர்தல் காலம். இந்த சமயத்தில் அமைதி நிலவுவதுடன், சட்டம் ஒழுங்கு பேணப்பட வேண்டும். ஆனால் இந்த மூன்றையும் குழப்பும் விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வாக்கை பெறும் நோக்கத்தில் இவை நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது. தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்று அரசியல் செய்பவர்களிற்கு நான் ஒன்றை கூறுகிறேன்- உங்களிற்கு வாக்கு தேவையெனில் அதை ஜனநாயக வழியில் பெற முயலுங்கள்.
மக்களை அச்சுறுத்தி, பயமுறுத்தி, இனவாதத்தை பரப்பி அதை பெற முயலாதீர்கள். கடந்த காலங்களில் அப்படி வாக்கை பெற முயன்றவர்கள் யாரும் நிலைக்கவில்லை என்றார்.