இன்றைய வானிலை நிலவரம்

weather 2
weather 2

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவாமாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் கரையோரத்திற்கு அப்பால் காலையில் ஓரளவிற்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.