இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி !

6 hy
6 hy

இலங்கையின் பணவீக்கம் கடந்த 12 மாதங்களாக 6.2 சதவீதமாக காணப்பட்டிருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

உணவுகளின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இவ்வாறான நிலைமைக்கு காரணம் என்று புள்ளிவிபர திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் நுகர்வோர் விலைச்சுட்டெண் 0.9 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 134.6 புள்ளிகளாக இருந்த நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது தற்போது 133.4 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும், உணவுப் பொருட்களுக்கான சுட்டெண், 3.2ச தவீதத்தினால் குறைவடைந்துள்ளதோடு உணவல்லாத பொருட்களுக்கான சுட்டெண் தொடர்ச்சியான அதிகாரிப்பை கொண்டிருப்பதாகவும் தெறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மத்தியவங்கியானது வட்டிவீதங்களை குறைத்து நிதிச் சந்தையினுள் பெருமளவான பணத்தினை உட்புகுத்தியிருந்ததோடு நாணய மாற்று விகிதத்தில் மென்மையான போக்கினையும் பின்பற்றியிருந்தது.

அத்துடன் பாரிய தனிநபர் கடன்கள் இருந்தபோதும் நாணயமாற்று விகித்தினை அழுத்தங்களுக்கு உள்ளாக்கி நிதிப்பற்றாக்குறையை தவிர்த்திருந்தமையும் பணவீக்கம் குறைவடைவதற்கு காரணமாக இருந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.