தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்கள் காத்தான்குடியில் புதைக்கப்பட்டது

kattankudy
kattankudy

உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான நசார் முகமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (27.09.2019) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாயல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் புதைக்கப்பட்டுள்ளது .

குறித்த தற்கொலை குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது இந்த உடற்பாகங்களை அரச செலவில் புதைக்குமாறு அரசாங்க அதிபருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த நிலையில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த மாதம் 26ம் திகதி இரவோடு இரவாக இந்த உடற்பாகங்கள் புதைக்கப்பட்டு பொதுமக்கள் போராட்டத்தையடுத்து கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உடற்பாகங்களை நீதிமன்ற உத்தரவுக்கமைய மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தின் கட்டளைக்கமைய குறித்த உடற்பாகங்களை நேற்று வெள்ளிக்கிழமை புதிய காத்தான்குடி 3ம் குறிச்சியிலுள்ள பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்டதையடுத்து வைத்தியசாலையில் இருந்த உடற்பாகங்களை காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பெறுப்பேற்று பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்புடன் குறித்த மையவாடியில் இஸ்லாமிய மார்க்க கடமைகள் எதுவும் பின்பற்றப்படாத நிலையில் புதைக்கப்பட்டது.