இத்தாலி கப்பலில் இருந்து வெளியேறிய இலங்கையர்.!

1 a 2
1 a 2

இத்தாலியின் எம்.எஸ்.சீ மெக்னிபிகா கப்பலில் உள்ள இலங்கையரை கடற்படையினர் சற்றுமுன்னர் வெளியேற்றி கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில அவரை 21 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பூசா கடற்படை முகாமிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி MSC மெக்னிஃபிகா கப்பலில் உள்ள இலங்கை பணியாளரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இலங்கை கடற்படையினர்

அவுஸ்திரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த MSCமெக்னிஃபிகா என்ற பயணிகள் கப்பலில் சமயல் கலைஞராக பணிப்புரிந்த இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அநுர ஹேரத் என்ற சமயல் கலைஞர் தம்மை இலங்கையில் தரையிறங்க அனுமதிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

காணொளி ஒன்றை வெளியிட்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த கப்பல் இன்று (06) எரிப்பொருள் நிரப்புவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடும் சந்தர்ப்பத்தில் குறித்த சமயல் கலைஞரை தரையிறக்க எதிர்பார்பதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க அததெரணவிற்கு தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த MSCமெக்னிஃபிகா என்ற பயணிகள் கப்பல் இன்று (06) எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளது.