இலங்கையின் தேயிலை நிமோனியாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் : ரொமேஷ் பத்திரன!

Untitled 1
Untitled 1

அதிக மருத்துவ குணம் கொண்ட ”பிளக் டீ” நிமோனியா நோயினை கட்டுப்படுத்த உதவுவதாக இலங்கையின் மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.

இலங்கையின் தேயிலை சர்வதேச சந்தையில் கேள்வியை எழுப்ப இதுவே காரணம் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

இன்று (6) இடம்பெற்ற அரச தகவல் திணைக்களத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பத்திரன இதனை குறிப்பிட்டார்.

இலங்கையின் பிரதான ஏற்றுமதியான தேயிலை, இறப்பர் என்பவற்றை பலப்படுத்தவும் மற்றும் தொழ்ற்சாலைகளை மீண்டும் இயக்கவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவருகின்றது.

எமது தேயிலைக்கான கேள்வியும் ஏற்பட்டுள்ளதோடு சுகாதார பானமாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இது எமக்கான உற்பத்தியை ஏற்படுத்திக்கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.