மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடல்!

download 2 4
download 2 4

மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்ராஸ் தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று மாலை 2.30 மணிக்கு விசேட கூட்டம் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள் , பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பிரதிநிதிகள், சதோச நிறுவனத்தின் பிரதேச முகாமையாளர்கள் ,உணவு பொருட்களை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரும் தனியார் நிறுவனங்கள் ,பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்ட மக்கள் முன் வைத்த பல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே குறித்த கூட்டம் அரசாங்க அதிபரின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது மக்கள் இக்கட்டான சூழ் நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் இதனை சாட்டாக வைத்து விலை மோசடி செய்தல், பொருட்களை பதுக்கி வைத்தல் , அரசாங்கத்தினால் அமுல் படுத்தப்பட்ட விலைகள் உள்ளடங்களாக பொருளை புனைப்பெயர் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்ட முறைப்பாடுகளுக்கு உடன் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக குறித்த கூட்டம் இடம் பெற்றது.

மேலும் தொண்டு நிறுவனங்களால் பல்வேறு இடங்களில் உணவு பொருட்கள் கொடுக்கப்படுகின்றது.

அதை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

மேலும் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக பாஸ் நடை முறைகளை கவனத்தில் எடுக்கவும் , கிராமம் கிராமமாக நடமாடும் உணவு விநியோகங்களை மக்களுக்கு வழங்கும் படி அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.