நாளை பிரதமர் தலைமையில் சர்வகட்சி கூட்டம்!

.jpg
.jpg

தற்போது நாட்டின் நிகழ்கால நிலவரங்கள் குறித்து கலந்துரையாடும் சர்வ கட்சி தலைவர்களின் கூட்டம் நாளை மறுதினம் (9) காலை பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் தலைமையில் நாளை (8) நாள் ஆளும் கட்சி உறுப்பினர்களின் சந்திப்பொன்றும் பிற்பகல் ஆறு மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாடே பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகளை கையாளும் செயற்பாடுகளை மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கும் விதத்தில் பிரதமர் தலைமையில் வாராந்த சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று வருகின்றது அறிந்தவிடயமே.

இதைத் தொடர்ந்து நாளை மறுதினம் (9) காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை அலரிமாளிகையில் சர்வ கட்சி தலைவர்களின் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சினைகள் குறித்த இணையதள கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. மந்திரி.எல்கே (manthiri.lk) எனும் இணையதளம் மூலமாக இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதுள்ள நிலைமையில் அரசாங்கம் அடுத்த கட்டமாக எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது, மக்களுக்கான நிவாரண உதவிகளை எவ்வாறு கையாள்வது, சுகாதார வேலைத்திட்டங்களை பலப்படுத்த அதற்கான நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற அரசாங்கதின் வேலைத்திட்டங்களை தெளிவுபடுத்தும் விதமாக இந்த சந்திப்பு அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.