திரையரங்க உரிமையாளர், ஊழியர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

6 7es
6 7es

திரையரங்க உரிமையாளர்களுக்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ள திரைப்படக் கலைஞர்களுக்கும் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நிவாரணம்

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் காட்சியாளர் சபையான ரித்மா சபைக்குட்பட்டஇ கூட்டுத்தாபனத்துடன் முறையான வகையில் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ள அனைத்து திரைப்பட அரங்குகளுக்கும் 3 மாத காலத்திற்காக தலா ரூ 100,000 வீதம் நிவாரணத்தை வழஙகுவதற்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச அவர்களின் ஆலோசனை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் 3 மாத காலத்திற்குள் மாதாந்தம் பணியாளர் சபைக்கு சம்பளம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு கொடுப்பனவாக ரூபா 50 000 எஞ்சிய ரூபா 50 000 பத்து மாத காலத்திற்குள் பகுதியளவில் செலுத்தக்கூடிய வட்டியற்ற கடன் தொகையாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், திரைப்படக் கூட்டுத்தாபனத்தினால் திரைப்படக் கலைஞர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு முறையின் கீழ் 160 கலைஞர்களுக்கு மாதாந்தம் செலுத்தப்படும் ரூபா 5000 கொடுப்பனவிற்கான தொகையை 3 மாத காலத்திற்கு முன் கூட்டியே செலுத்துவதற்கும் கூட்டுத்தாபனத்தின் தலைவரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை , கூட்டுத்தாபன தலைவர் ஜயந்த தர்மதாச அவர்களின் தலைமையிலான திரைப்படக் கலைஞர் அமைப்பான சினெஸ்டார் நிதியத்தின் மூலம் ரூபா 5000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அடங்கிய பொதி மற்றும் அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.