கொரோனா தொற்றைக் குறைக்க அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்:பவித்ரா வன்னியாரச்சி

625.500.560.350.160.300.053.800.900.160.90 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 4

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 80 பேர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஏனையவர்கள் குறித்த 80 பேருடன் நெருங்கிப் பழகியவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி இவ்வாறு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பு பேணியவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 19ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் நாட்டில் மக்கள் நடமாட்டம் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், 30 நாட்களில் நோய் அறிகுறிகளை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19ம் திகதி வரையில் அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.