பொறிஸ்ஜோன்சனின் உடல்நிலையில் முன்னேற்றம்- தீவிரகிசிச்சை பிரிவிலிருந்து மாற்றப்பட்டார்

download 3 4
download 3 4

தீவிர கிசிச்சை பிரிவிலிருந்து வெளியேறியுள்ள பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் தனக்கு கிசிச்சை வழங்கிய மருத்துவர்களையும் தாதிமார்களையும் பாராட்டியுள்ளார்.

பிரதமர் தீவிர கிசிச்சை பிரிவிலிருந்து வோர்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் என பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அங்கு அவருடைய உடல்நிலை உன்னிப்பாக அவதானிக்கப்படும், அவர் குணமடைதலின் ஆரம்ப கட்டத்தில் உள்ளார் என பிரிட்டனின் பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர் சிறந்த உணர்வுகளுடன் இருப்பதாக பிரிட்டனின் பிரதமர் அலுவலக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையை சேர்ந்தவர்கள் தனக்கு வழங்கிவரும் மிகச்சிறந்த கிசிக்கைக்காக பொறிஸ்ஜோன்சன் அவர்களை பாராட்டியுள்ளார் எனவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நேற்றிரவு பொறிஸ்ஜோன்சன் தனது காதலியுடன் தொலைபேசியில் உரையாடினார் என சன் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் வழங்கிய கையடக்க தொலைபேசி ஊடாக காரி சிமென்ட்சுடன் பொறிஸ்ஜோன்சன் உரையாடியுள்ளார்.