ஹபரணையில் யானைகளின் இறப்பிற்கான காரணம்- அறிக்கை வெளியானது

haparana
haparana

ஹபரண, ஹிரிவடுன்ன, தும்பிகுளம காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் கடந்த செப்டெம்பர் (27.09.2019)ஆம் திகதி நான்கு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டதோடு, செப்டெம்பர் (28.09.2019)ஆம் திகதி மேலும் 3 யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. அதற்கமைய, குறித்த பகுதியில் ஏழு யானைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு இறந்த யானைகளில் ஆறு பெண் யானைகளும் 1 ஆண் யானையும் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது

இந்நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானைகள் நஞ்சு வைத்தே கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யானைகளின் இறப்புக்கு நச்சு மருந்து, கைத்தொழிற்சாலை கழிவுகள் அல்லது பெக்ரீயா போன்றவை காரணமாக இருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை இறப்புக்களுக்கான உண்மைக்காரணம் வரும் வாரத்தில் தெரியவரும் என்று பேராதெனிய பல்கலைக்கழக விலங்கின விஞ்ஞான பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.