தபால் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் கோளாறு!

sl
sl

இலங்கை அரசாங்கத்தின் தபால் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறினை சீரமைக்க, கொழும்பு மற்றும் களனி பல்கலைக்கழகங்களின் பொறியியல் பீடத்தின் 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறினை வழமைக்குக் கொண்டுவர முடியாவிடின், ஊழியர்களின் ஊடாக கட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக பிரதித் தபால்மா அதிபர் N.P. கந்தனாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டிற்குச் சென்றுள்ள தபால்மா அதிபர் இன்று நாடு திரும்பியவுடன், இந்த விடயம் குறித்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் பிரதித் தபால்மா அதிபர் கூறியுள்ளார்.

இந்தக் கோளாறு காரணமாக திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தொழில்நுட்பக் கோளாறினை உடனடியாக சீரமைக்காவிடின், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.