ஹபரணையில் யானைகளின் இறப்பு தொடர்பில் ஆராய மூவரடங்கிய குழு நியமனம்

haparana 1
haparana 1

ஹபரண, ஹிரிவடுன்ன, தும்பிகுளம காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் ஏழு யானைகளின் இறப்பு குறித்து விசாரணை செய்வதற்கு மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மூத்த கால்நடை வைத்தியர், உதவி வனவிலங்கு இயக்குநர் மற்றும் வனவிலங்குத்துறை அதிகாரிகள் ஆகியோர் குறித்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

குறித்த குழு ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என வனவிலங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.