மேல் மாகாணத்தில் 154 , கொழும்பில் மட்டும் 78 பேர் ஆக உயர்ந்தது தொற்று !

3 4 2
3 4 2

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு நேற்றிரவு 9.40 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் 78 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், கண்டி மாவட்டத்தில் 07 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கேகாலை மாவட்டத்தில் 03 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குருநாகல், மாத்தறை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேர் வீதமும், காலி, மட்டக்களப்பு, பதுளை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதமும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே தனிமைப்படுத்தும் நிலையங்களில் இருந்து 38 பேரும், வெளிநாட்டுப் பிரஜைகள் 03 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இன்றிரவு 9.40 மணிவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 271 ஆகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.