ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாடு

unp
unp

ஐக்கிய தேசியக் கட்சியின் 77வது மாநாடு இன்று(Oct.03) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இம் மாநாடு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆரம்பமாகவுள்ள மாநாட்டில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளர்கள் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் மாநாட்டில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அஜித் பீ.பெரேரா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.