ஊரடங்குச் சட்டம் பற்றிய விசேட அறிவித்தல்!

1 curfew 2
1 curfew 2

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மே மாதம் 4ஆம் திகதி காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நாளைமறுதினம் 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமுலாகும். அதன் பின்னர் மே முதலாம் திகதி வரை இந்த மாவட்டங்களில் இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு மறுநாள் காலை 5 மணிவரை தினசரி அமுலில் இருக்கும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் துறையினர் மே மாதம் 4ஆம் திகதிக்கு பின்னர் செயற்பட சட்டங்கள் தளர்த்தப்படவுள்ளன. தனியார் துறையினர் காலை 10 மணிக்கு வேலைகளை ஆரம்பிக்கக் கேட்கப்பட்டுள்ளனர்.