கொரோனா வாழும் இடங்கள் கண்டுபிடிப்பு!

8 hj
8 hj

கொரோனா வைரஸானது, அதிக சனநெரிசல்மிக்க இடங்களிலும் காற்றோட்டம் இல்லாம அறைகளிலும் வளியில் தங்கி இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்று புதிய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான நிலைமைகளில் கொரோனா வைரஸானது வளியின் சிறுதுணிக்கைகள் ஊடாக மனித உடலுக்குள் செல்வதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளின் கழிவறைகள, மூடிய சனநெரிசல்மிக்க அறைகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடைமாற்றும் அறை போன்றவற்றின் வளிப்பரப்பில், கொரோனா வைரஸின் மரபணு பொருட்கள் அடங்கிய வளித்துகல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு இலங்கை ஆராச்சி சஞ்சிகையில் நேற்று பிரசுகரிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த வைரஸானது எந்த அளவுக்கு வீரியமாக வளியின் ஊடாக பரவுகிறது என்பது குறித்த தெளிவான விளக்கம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களிலேயே நிகழக்கூடும் என்றும், சீனாவில் சுமார் 75 ஆயிரம் கொவிட்-19 நோயாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் எவருக்கும் வளியின் ஊடாக இந்த வைரஸ் பரவி இருக்கவில்லை என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.