அனைத்து தபாலகங்களும் மே 4இல் திறக்கப்படும்

ped
ped

நாடுமுழுவதும் உள்ள அனைத்து தபாலகங்களிலும் வரும் மே 4ஆம் திகதி சேவைகள் மீள ஆரம்பமாகும் என தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

எனினும் சுகாதார கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சேவைகள் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 21 மாவட்டங்களில் தபாலகங்கள் திறக்கப்பட்டு தபால் சேவைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரும் 4ஆம் திகதி சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.