கண்டி – நாவலப்பிட்டி நகரம் மூடப்பட்டது

0 j
0 j

கண்டி – நாவலப்பிட்டி நகரத்தின் வர்த்தக நடவடிக்கைகளானது முற்றாக முடக்கப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த இரண்டு கடற்படை வீரர்கள் தங்களது விடுமுறை நாட்களில் நாவலப்பிட்டிக்குச் சென்றிருந்தனர்.

தற்போது குறித்த கடற்படை வீரர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்ட கடற்படை வீரர் ஒருவர் நாலவப்பிட்டியில் தங்கியிருந்த காலப்பகுதியில் நான்கு கடைகளுக்கு விஜயம் செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நாவலப்பிட்டி வர்த்தகர்கள் சங்கத்தின் தலவர் கித்சிறி கருணாதாசா, நவலப்பிட்டி காவல்துறை மற்றும் வர்த்தகர்கள் சங்க உறுப்பினர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளை இவ்வாறு முடக்குவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து கடைகளையும் மூடி, நாவலப்பிட்டி நகரத்தை கிருமி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.