பெண் விவசாயி இடம் தேங்கி கிடந்த பூசணிக்காய்கள் வாங்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டன

2 a
2 a

பெண் தலைமைத்துவ குடும்பத்தவரான கிளிநொச்சி மணியன் குளம் பகுதியில் வசிக்கும் கோகிலராசா சத்தியகலா வாழ்வாதார நடவடிக்கையாக பூசணி செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

தற்போதைய கொரோனா அவசரகால நிலையால் விவசாயிகளின் உற்பத்திகளை சந்தைப்படுத்த இயலாத சூழலில் இப்பெண்மணி எதிர்நோக்கும் சவால்களை நலன்விரும்பிகள் முகநூலில் பதிவிட்டு இருந்தனர் .

அவரால் செய்கை பண்ணப்பட்ட ஆயிரக்கணக்கான கிலோ நிறையுடைய பூசணிக்காய்கள் பழுதடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது .

இதன் பயனாக நாம் எமக்காக நாமாவோம் அமைப்பு பெண்ணின் பொருளாதார நெருக்கடியை குறைக்கும் வகையில் 950 கிலோ நிறையுடைய பூசணிக்காய்களைக் கொள்வனவு செய்து கிளி மக்கள் அமைப்பு ஊடாக 250 கிலோ பூசணிக்காய்களை கிளிநொச்சி பகுதியிலும், மிகுதி காய்களை யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப் பகுதிகளான வசந்தபுரம், மணியன் தோட்டம், ஹெலன் தோட்டம், மகேந்திரபுரம், ஈச்சமோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு பகிர்ந்தளிதுள்ளது.

இந்த மனிதநேயமிக்க செயற்பாட்டிற்கு திரு.கணநாதன் மற்றும் திரு.விமல் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர் .