ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் கொரோனா நோயாளர்களுக்குச் சிகிச்சை!

56
56

கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தற்போது 18 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, கொழும்பு தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் 141 பேரும், வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் 66 பேரும், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 75 பேரும், இரணவில வைத்தியசாலையில் 22 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 55 பேரும், வெலிசறையிலுள்ள கடற்படை வைத்தியசாலையில் 126 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் மேலதிக சிகிச்சைக்காக முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேலும் 187 பேர் 30 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.