பாகிஸ்தானுக்கு ஆசை காட்டிய சீனா

77 es
77 es

சீனாவில் உள்ள நிறுவனமான சினோபார்மா கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. அதை பாகிஸ்தானில் உள்ள நோயாளிகளுக்கு கொடுத்து பரிசோதிக்க விரும்பியது. இதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டதாக தகல்கள் வெளியாகி உள்ளன.,

கொரோனா வைரஸை தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் முயன்று வருகின்றன. முதன்முதலில் தொற்று பரவிய சீனாவும் முயன்று வருகிறது. சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் தீவிரமாக இறங்கி உள்ளன. சீனாவில் உள்ள நிறுவனமான சினோபார்மா நிறுவனம் தான் உலகின் பல வைரஸ் நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்து. இந்நிலையில் அந்நிறுவனம் தீவிரமாக ஆராயச்சி செய்து கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
இந்த தடுப்பூசியை சோதித்து பார்த்து எப்படி வேலை செய்கிறது என்பது தெரிந்த பின்னரே பயன்படுத்த முடியும். இந்நிலையில் சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடு பாகிஸ்தான். ராணுவம், நிதியுதவி உள்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியுள்ளது சீனா. இந்நிலையில் கொரோனாவைத தடுக்க கண்டுபிடித்த தடுப்பூசியை பாகிஸ்தானில் சோதக்க முடிவு செய்தது.

இது தொடர்பாக சினோபார்மா கம்பெனி தலைமை இயக்குனர் லீ குவான் பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான சுகாதார ஆய்வுஅமைப்புக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் கொரோனா வைரஸை அழிக்க தடுப்பூசி கண்டுபிடித்துள்ளோம்.இதை நீங்கள் உங்கள் நாட்டில் உளள நோயாளிகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகள் ஒருவேளை இறந்தால் அதற்கு கோடிக்கணக்கில் இழப்பீடுகள் தரத்தயார். அத்துடன் நோயாளிகள் பிழைத்துக்கொண்டால் தடுப்பூசி முதல் சப்பளை உங்கள் நாட்டுக்கத்தான் தருவோம் என்று கூறியிருந்தார்.

இந்த கடிதம் பாகிஸ்தான் சுகாதார அமைப்பின் தலைவர் மேஜர் ஜெனர் அமீர் இக்ரம் என்பவருக்கு கடந்த 21ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இக்கடிதத்திற்கு பதில் அளித்த பாகிஸ்தான் சுகாதார ஆலோசகர் ஜாபர் மிர்சா. “உலகெங்கிலும் தடுப்பூசிகளை உருவாக்க பல முயற்சிகள் உள்ளன என்றாலும், பாககிஸ்தானில் இதுபோன்ற எந்த முயற்சியும் தற்போது செய்யவில்லை என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்,

ஆனால் ஒரு தடுப்பூசி உருவாக்கும் சீன நிறுவனம் பாகிஸ்தானைத் தொடர்புகொண்டு மருத்துவ பரிசோதனைகளின் ஒரு பகுதியாக மாற முன்வந்தது. நாங்கள் அவர்களிடமிருந்து கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளோம். இதேபோன்ற வாய்ப்பை ஜப்பானில் உள்ள ஒரு நிறுவனமும் எங்களிடம் கேட்டது. அவர்களிடம் நாங்கள் கூடுதல் தகவலை கேட்டுள்ளோம் என்றார். பாகிஸ்தானில் தற்போதைய நிலையில் 15749 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 346 பேர் உயிரிழந்துள்ளனர்.