முக கவசம் ,தொற்று நீக்கிகள் தரம்தொடர்பில் சோதனை

0 d
0 d

முகக்கவசங்கள் மற்றும் தொற்று நீக்கி திரவங்களின் தரம் தொடர்பிலான சோதனைகளை
சந்தையில் மேற்கொள்ள உள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த சோதனைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சோதனை நடவடிக்கையின் போது சந்தையில் அடையாளம் காணப்படக்கூடிய தரம்குறைந்த முகக்கவசங்கள் மற்றும் தொற்று நீக்கி திரவங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் நிர்வாக அதிகாரி வைத்தியர் கமல் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.