மொரட்டுவ பகுதியிலிருந்து வெடிகுண்டுகள் மீட்பு!

mottuwa
mottuwa

கொழும்பை மொரட்டுவ , ராவதாவத்தப் பகுதியில் 3 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றும் 2 சிறிய வெடி குண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் குறித்த குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் குண்டுகள் காணப்படுவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அங்கு விரைந்த பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் குண்டுகளை அகற்றியுள்ளனர்.

குறித்த குண்டுகள் நீண்டகாலமாக அவ்விடத்தில் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.