அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒரே மேசையிலிருந்து நிலைப்பாடு எடுக்கவேண்டும் – சுரேஷ்!

Suresh
Suresh

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தரப்புக்கள் பொது வேட் பாளரை நிறுத்தவேண்டுமென்ற அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அது எவ்வளவு சாத்தியமென்பது தெரியவில்லை. தேர்தல் குறித்து தமிழர் தரப்பிலுள்ள அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரே மேசையில் இருந்து பொது வான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். – இவ்வாறு வலியுறுத்தியுள் ளார் ஈழ மக்கள் புரட்சிகர விடு தலை முன்னணியின் தலை வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரே மச்சந்திரன்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒரு வரை நிறுத்துவது தொடர்பாகச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் தமிழ்க் கட்சிகளுடன் பேசி வரு கின்றனர். இதற்கமைய கூட்டமைப் பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வீ.விக்கி னேஸ்வரன் ஆகியோருடன் பேச் சுக்களை நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந் திரனுடனும் கலந்துரையாடியுள்ளனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரை யாடி இருப்பதாகவும் இதன்போது தங்களது கட்சியின் நிலைப்பாட் டைத் தெளிவுபடுத்தியிருப்பதாக வும் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கை யில் ஜனாதிபதித் தேர்தல் தொடர் பாக சகல தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டு மென்ற அடிப்படையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் செயற்படு கின்றனர். அதிலும் பொது வேட் பாளர் ஒருவரை நிறுத்தவது தொடர்பில் எம்முடனும் பேசியிருக் கின்றனர். அதே நேரம் அனைத் துத் தரப்பினரும் இணைந்து பொதுக் கோரிக்கைளை முன்வைத் துப் போட்டியிடும் வேட்பாளர் களுடன் பேசுவது தொடர்பிலும் ஆராய்ந்தோம். இதில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கால அவகாசம் முடிவடையும் நிலையில் இருக்கிறது.

அதுவும் எதிர்வரும் திங்கட்கிழமை முடி வடைகிறது. ஆகையால் பொது வேட்பாளரை நிறுத்துவது எவ் வளவு சாத்தியம் என்பது கேள்வி யாகத் தான் இருக்கிறது. ஆகவே இருக்கின்ற கால அவகாசத்தில் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டி ருக்கிறது. தமிழ் மக்கள் பல்வேறு பிரச் சினைகளை எதிர்நோக்கி வரு கின்றனர். குறிப்பாக அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு, காணி ஆக்கிரமிப்பு, சிங்கள பெளத்த மயமாக்கல் என்ற பிரச்சினைகள் இருக்கின் றன. இவற்றுக்குத் தீர்வு காணப் படவேண்டியது மிக மிக அவசிய மானது.

ஆகையால் இவ்வா றான கோரிக்கைகளை முன்வைத் துப் போட்டியிடும் வேட்பாளர்களு டன் பேசவேண்டும். அதற்குச் சகல தமிழ்க் கட்சி களும் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.
அவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பதற்கு அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒரே மேசையிலிருந்து கலந்துரை யாடி முடிவை எடுக்கவேண்டும். அவ்வாறு எடுக்கும் பொதுவான நிலைப்பாட்டை முன்வைத்து வேட்பாளர்களுடன் பேசி அதன் பின்னர் ஆதரிக்கலாமா இல் லையா என்பது குறித்து முடிவை எடுக்கலாம் என்பதைக் கூறி யிருக்கின்றேன். துமிழர் தரப்புக்கள் ஒருமித்து பொதுவான நிலைப்பாட்டை உண் மையில் எடுக்கவேண்டுமாக இருந்தால் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒரே மேசையில் இருந்து பேசுவதற்குரிய நடவடிக் கைகள் எடுக்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்தக் குழுவின ரிடம் கேட்டிருக்கின்றேன். – என் றார்.