அரசியல் கைதிகளுக்காகவோ காணமல் போனவர்கள் சார்பிலோ நான் வாதாடவில்லை -சுமந்திரன்

RW summa
RW summa

‘நான் சிவில் வழக்குகளில் ஆஜராகும் ஒரு சட்டத்தரணி. புலிகளின் அரசியல் கைதிகளுக்காகவோ காணமற்போனவர்களுக்காகவோ நான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை, 90களில் ஜேவிபியினர் சார்பாகவே சில வழக்குகளில் ஆஜாரானேன்.’ என ஆபிரகாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சிங்களம் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘2015 ஆம் ஆண்டு தேர்தலில் 58 ஆயிரம் வாக்குகளை பெற்றீர்கள். ஜே.வி.பி சார்பில் ஆஜராகி, யாழ்ப்பாணத்தில் இந்தளவு வாக்குகளை பெற முடியாதே’ எனச் பேட்டியாளர் எழுப்பிய கேள்விக்கு,

“முடியும். அன்று தேர்தல் காலத்தில் ஜே.வி.பியினர் யாழ்ப்பணத்திற்கு வந்து மே தின பேரணியை நடத்தும் போது நானும் சிகப்பு சட்டை அணிந்து அவர்களுடன் யாழ்ப்பாண வீதிகளில் சென்றேன். எமது மக்கள் அப்படி பார்க்க மாட்டார்கள்’ என்று பதிலளித்தார்.