புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கி வைப்பு

904887df 794a 4f31 93b2 e3203f3a06b2
904887df 794a 4f31 93b2 e3203f3a06b2

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியமர்வு, மறுவாழ்வளிப்பு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிப்பு நிகழ்வும் புனர்வாழ்வழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வும் கொடிகாமம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி தேவேந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியமர்வு, மறுவாழ்வளிப்பு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி வைதேகி, மேலதிக மாவட்ட செயலாளர் திரு முரளிதரன், தென்மராட்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் செ.சுபச்செல்வன், பயனாளிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இந்த நிகழ்வில் 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன.

64 ஆயிரம்ரூபா பெறுமதியான கோழிக்கூட்டிற்குரிய காசோலை, 108 999 ரூபா பெறுமதியான தையல் இயந்திரம், 119 900 ரூபா பெறுமதியான ஸ்ரூடியோ மொனிற்றர், 148000 ரூபா பெறுமதியான மேசன் உபகரணம் என்பன வழங்கப்பட்டன.

மூன்று பயனாளிகளுக்கு 135000 ரூபா பெறுமதியான 10 இஞ்சி தச்சுப்பட்டறை, 105000 பெறுமதியான 12 இஞ்சி தச்சுப்பட்டறை, 99000 ரூபா பெறுமதியான ஆடு ஆட்டுக்கொட்டில் அமைப்பதற்கான நிதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டது.