வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயபொங்கல்விழா

4b
4b

வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு  வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின், வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.
இந் நிலையில் தற்போதைய கொரோனா  தொற்று அச்சம் காரணமாக, இவ்வருடம் குறித்த பொங்கல் நிகழ்வு பாரிய அளவில் இடம்பெறமாட்டதெனவும், பாரம்பரிய வழிபாட்டுக் கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாதொடர்பாக (13.05 )இன்றையநாள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பில் கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில்,
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வருடத்திற்கான, வருடாந்த பொங்கல் நிகழ்வு ஜூன் மாதம் 08ஆம் திகதி இடம்பெற இருக்கின்றது.
அந்தப் பொங்கல் நிகழ்வினை நடாத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆனால் சமகாலத்தில் நிலவுகின்ற கொரோனா நோய் நிலைமையின் காணமாக உலகத்தோடு நம் ஒத்துப்போகவேண்டிய தேவைபற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
அதனடிப்படையில் சுகாதாரப் பகுதியின் ஆலோசனைகளை ஏற்று, இந்த ஆண்டு பொங்கல் விழாவினை பாரிய பொங்கல்விழாவாக இல்லாமல், பாரம்பரிய ரீதியில்எடுக்கின்ற கிரிகைகளை மாத்திரம் ஆலயத்தில் செய்ய இருக்கின்றோம்.
அந்தவகையில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது.
எனவே அம்பாள் மீது மிகுந்த பக்திகொண்ட பக்தர்கள், நாட்டின்நிலைமையைச் சிந்தித்துப்பதுடன், நோயினைப் பரப்புபவராகவோ, ஏற்பவராகவோ இருககக்கூடாதுைஎன்பதனைக் கருத்தில்கொண்டு, இவ்வாண்டு பொங்கல் நிகழ்வில் ஆலயத்தில் கூடவேண்டாமென, மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம் என்றனர்.
இதேவேளை இது தொடர்பில் மாவட்டசெயலர் க.விமலேஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்கள் கூட்டங்கூடுவதைத் தவிர்ப்பதற்காக, குறித்த பொங்கல் கிரிகைகள் இடம்பெறும் நாட்களில், குறித்த பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் தற்போதுள்ள கொரோனாத்தொற்று நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, போலீசார், இராணுவத்தினர், மற்றும் மாவட்டசெயலகம் வழங்கும் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் ஏற்று, பொதுமக்களை ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவித்தார்.

மேலும் இக் கலந்துரையாடலில் மாவட்டசெயலர் க.விமலநாதன், மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன், சுகாதாரப்பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் திருமதி.மணிவண்ணன் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேசசபைின் செயலாளர், போலீசார், இராணுவத்தினர், கோவில் நிர்வாகதினர் எனப்லரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.