தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 31 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்!

.jpg
.jpg

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய (400) ற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கொரோனோ தொற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்களென (190) பேர் பேருந்துகளின் மூலம் அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொவிட் 19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட (31) பேர் இன்றயதினம் நாவலப்பிட்டி, கண்டி , மொனராகலை, செவனகல போன்ற இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை கொவிட் 19 வைரஸ் காரணமாக வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக அழைத்துவரப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.