மன்னார் அறுகம்குன்று பகுதி மக்களின் அவலம் ; கண்டுகொள்ளாத அரசு !

IMG 9930 scaled
IMG 9930 scaled

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அறுகம் குன்று பகுதியை சேர்ந்த பல குடும்பங்கள் கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் மிகவும் சிரமப்படுவதாக கூறியுள்ளனர் .

இந்த பகுதியில் உள்ள அனேகமான குடும்பங்கள் கூலித் தொழில் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர். ஊரடங்கு சட்டம் காரணமாக இவர்களால் கூலி தொழிலிற்கும் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த குடும்பங்களுக்கு ஒழுங்கான வீடு , நீர் வசதி இல்லை என்பதோடு தொடர்ந்து செய்வதற்கும் தொழில் எதுவும் இல்லாத நிலையில் அல்லாடுகின்றனர் .

தமக்கு என தற்காலிக வாழிடங்களையாவது அமைத்து தாருங்கள் என இந்தமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

இந்த குடும்பங்களில் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருந்தும் கழிப்பறை வசதி இன்றி காடுகளுக்கு செல்லும் நிலையில் உள்ளனர் .

இவர்களுகான தற்காலிக ஏற்பாட்டையாவது அரச அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது .

சம்மந்தபட்ட அதிகாரிகள் தமக்கான அடிப்படை தேவைகளையாவது நிறை வேற்றி வழங்குமாறு இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.