மன்னார் பகுதியிலிருந்து வருகைதந்தவர்களால் முல்லைத்தீவில் குழப்பம்!

625.200.560.350.160.300.053.800.300.160.90
625.200.560.350.160.300.053.800.300.160.90

தற்போதுள்ள சூழ்நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் சாலைப் பகுதியில் அட்டைத்தொழில் செய்வதற்காக மன்னாரில் இருந்து சென்ற மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்களால் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு மாவட்டத்தில் இருந்து வேறுமாவட்டங்கள் செல்வதற்கு பல்வேறு கெடுபிடிகளை அரச திணைக்களங்கள் மேற்கொண்டு வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து அட்டைத்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்டம் சாலைக்கடற்பரப்பில் அட்டைத்தொழில் செய்வதற்காக இரண்டு வாகனங்களில் நான்கு படகுகள் ஏற்றப்பட்ட நிலையில் சாலை நோக்கி சென்றுள்ளார்கள்.

குறித்த நபர்களை மாத்தளன் சந்தியில் வைத்து பிரதேச மீனவர்கள், மறித்து அங்கு செல்லவிடாது தடுத்தபோது மீனவர்களுக்கு இடையில் முரன்பாடுகள் ஏற்றபட்டுள்ளது.

குறித்த இடத்தில் முல்லைத்தீவு காவல்துறையினர் மற்றும் படையினர் பிரசன்னமாகி முரபாட்டினை சுமூகமாக்க முயற்சித்த போதும் மன்னாரில் இருந்து சுகாதாபரிசோதகர்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அனைத்து அனுமதியுடன் வந்தபோதும் மாத்தளன் மீனவர்கள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

பிரதேச செயலகத்தால் வழங்கப்படும் கொட்டுப்போமிட் எனப்படும் அனுமதி எடுக்காத நிலையில் கரையேரத்தில் அட்டை பிடிப்பதற்காக கரையோர மீனவ அமைப்புக்களின் ஒத்துழைப்பும் இல்லாத காரணத்தினால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக நீக்கப்பட்ட நிலையில் சட்ட அனுமதிகளுடன் தொழிலுக்கு வருமாறு மாத்தளன் பகுதி மீனவர்கள் குறித்த அட்டைத்தொழிலாளர்களிம் கோரி திருப்பி அனுப்பியுள்ளார்கள்.