சூழல் பாதுகாப்பிற்கான கருத்தரங்கு

01 3
01 3

ஓட்டமாவடி பிரதேச செயலகமும், ஓட்டமாவடி பிரதேச சபையும் இணைந்து சூழல் பாதுகாப்புக்கான வளமாக்கல் திட்டம் என்னும் தொனிப்பொருளில் நாற்றுக்களை உற்பத்தி செய்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(Oct.09) நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயம், காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம், மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி விவசாய திணைக்களத்தின் போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்டீன் வளவாளராக கலந்து கொண்டு நாற்றுக்களை உற்பத்தி செய்தல் தொடர்பான விளக்க கருத்துக்களை வழங்கினார்.

இதில் ஓட்டமாவடி பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.