ஆட்சிமாற்றம் ஏற்படும் – வாசுதேவ

Vasudeva Nanayakkara
Vasudeva Nanayakkara

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு நவம்பர் 16ம் திகதிக்கு பிறகு கேள்விக்குறியாக்கப்படும்.

அனைத்து இன மக்களும் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும். போலியாக வாக்குறுதிகளுக்கு நாட்டு மக்கள் இம்முறையும் ஏமாற மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.

அநுராதபுர நகரில் இன்று இடம் பெற்ற பொதுஜன பெரமுனவின் கன்னி கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொள்கையற்ற அரசியல் பிரச்சாரத்தையே ஐக்கிய தேசிய கட்சி தற்போது முன்னெடுத்து செல்கின்றது.

ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜிதி பிரேமதாஸவின் கருத்துக்கள் அனைத்தும் நகைச்சுவையாகவே காணப்படுகின்றது. எவ்வித கொள்கைகளும் இல்லாமலே 2015ம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே கடந்த ஐந்து வருட காலமாக நாடு பாரிய நெருக்கடிகளையும் அனைத்து துறைகளிலும் எதிர்க்கொண்டது.

ஐக்கிய தேசிய கட்சியிடம் தவறாக ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்கள் இன்று தவறினை திருத்திக் கொண்டுள்ளார்கள். மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியினை கைப்பற்றாது. நவம்பர் 16ம் திகதிக்கு பிறகு ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.