இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,859 ஆக அதிகரிப்பு

106436754 15839366223212020 02 18t165543z 3818534 rc243f9hlmwh rtrmadp 3 china health 1
106436754 15839366223212020 02 18t165543z 3818534 rc243f9hlmwh rtrmadp 3 china health 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுவரை (10.06.2020 – காலை 07.00) மொத்தமாக 1,859 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1057  ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 791 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர் 74 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

அத்தோடு, கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.