கழிவகற்றல் பம்பி இயந்திரம் மூலம் மலசல கூட கழிவுகள் வெளியேற்றம்!

20200118 212538 2
20200118 212538 2

கல்முனை மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட மருதமுனை – பெரியநீலாவணை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத்திட்டத்தில் கழிவுநீர் கடந்த பல வருடகாலமாக தேங்கிக் கிடப்பதால் இங்கு வசிக்கும் மக்களும் அயலவர்களும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக இங்கு வசிக்கும் மக்கள்
சுட்டிக்காட்டினர்.

இதனால் கடந்த 2020/06/07ஆம் திகதி
இங்கு வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த தலைமையிலான குழு குறித்த வீட்டுத்திட்டத்திற்கு விஜயம் செய்து
உடனடித்தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன் பொலிஸாரின் உதவியுடன் குறித்த பகுதிகளும் தற்காலிகமாக சுத்தம் செய்யப்பட்டது
பல ஊடகங்களில் வெளிக்கொண்டு வரப்பட்டது.

இவ்வீட்டுத்திட்டத்தில் இருந்து நாளாந்தம் வெளியேறும் மலசலகூட கழிவு, குழியலறைக் கழிவு நீர், சமையலறை கழிவு நீர் என்பன முறையாக வெளியேறுவதற்கான வடிகான் வசதிகள் செய்யப்படாமையால் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக இங்கு வாழும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

இம்மக்களின் பிரச்சினையை கேள்வியுற்ற அம்பாறை மாவட்ட பொது ஜன பெரமுனவின் அமைப்பாளும் பாராளுமன்ற வேட்பாளருமாகிய டாக்டர் கீர்த்தி ஸ்ரீ வீரசிக்கவின் கல்முனை பிரதேச இணைப்பாளரும், சமூக சேவையாளருமான ZA.நெளஷாத்தின் பெரும் முயற்சியால் பாதிக்கப்பட்டுள்ள இந்த மக்களின் பெரும் பிரச்சினையான இருந்து வரும் மலசல கூட கழிவுகளை வெளியேற்றும் முயற்சி கழிவகற்றல் பம்பி இயந்திரம் கொண்டு நேற்று (09) தற்காலிகமாக வெளியேற்றும் வேலைத்திட்டம் நடைபெற்றது.

இதனால் பொதுமக்களின் ஆரோக்கிய சுக வாழ்வை உறுதிப்படுத்த பாடுபட்ட சமூக சேவையாளர்களுக்கு மக்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்தார்கள்.