கதிர்காமத்திற்கான பாதையாத்திரை திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு- வாழைச்சேனையை வந்தடைந்து!

IMG 20200611 WA0005
IMG 20200611 WA0005

திருகோணமலையில் இருந்து ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதையாத்திரைக் குழுவினர் (11) நாளில் இன்று வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயினால் கடந்த மாதம் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை (24) மணித்தியாலயத்தில் நிறுத்தப்பட்டதுடன் பாதையாத்திரை தொடர்பாக எந்தவெரு அறிவித்தலும் இன்னமும் அரசாங்கம் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த மாதம் (21) ஆம் திகதி திருகோணமலையில் லங்கா பட்டினம் முருகன்கோவில் இருந்து (35) பேர் கொண்ட பாதயாத்திரைக் குழுவினர் (11) நாட்கள் பின்னர் வாழைச்சேனை கயிலாய பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர்.

கடந்த (15) வருடங்களாக இந்த பாதையாத்திரை தொடர்ந்து சென்றுள்ளதாகவும் எதிர்வரும் யூலை (18) ஆம் திகதி கதிர்காமத்திற்கு சென்றடைய திட்டமிட்ட நிலையில் தற்போது கொரோனா நோய் காரணமாக இருந்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் பல தளர்தப்பட்டதையடுத்து இந்த பாதையாத்திரையை ஆரம்பித்து (11) நாள் யாத்திரையையடுத்து வந்தடைந்துள்ளோம்.

இருந்த போதும் கதிர்காமத்துக்கு கொண்டு செல்ல தூக்கிய வேலை இடையில் வைக்க முடியாது இருந்தபோதும் கதிர்காமத்திற்கு செல்லமுடியாது. என தடுக்கப்பட்டால் மட்டக்களப்பு தாந்தா முருகன் ஆலையம் சென்று தரித்து நிற்பதாகவும் அதன் பின் பாதையாத்திரை ஆரம்பித்தால் அங்கிருந்து தொடர்ந்து காட்டுவழியாக கதிர்காமத்திற்கு சென்றடையவுள்ளதாக பாதையாத்திரைக் குழுவினர் தெரிவித்தனர்.