பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதியவர் அனுப்பி வைத்துள்ள கடிதம்

mahinda2
mahinda2

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 86 வயதுடைய முதியவர் ஒருவர் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்திற்கு “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு” என்ற தலைப்பிடப்பட்டு குறித்த முதியவர் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரிய பகுதியில் வசிக்கும் 86 வயதான கிராமிய சபையை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ். பீ.ஹேவாஹெட்ட என்பவரினால் இந்த கடிதம் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்துடன் 5000 ரூபா நாணயத் தாள் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்ததை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஅவதானித்தார்.

அதில் ”நான் 86 வயதான ஒருவர். என்னால் நடக்க முடியாது. நான் நோய்வாய்ப்பட்ட நிலையில், கட்டிலில் இருந்தபடி இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.

நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைந்துள்ள இந்நிலையில், மக்களை வாழ வைக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சி வரவேற்கத்தக்கது. 

எவ்வாறாயினும், கொரோனா நிதியத்திற்கு என்னுடைய 5000 ரூபாவை ஏற்றுக்கொண்டு, அந்த புண்ணிய செயற்பாட்டில் என்னையும் ஈடுபடுத்திகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிதித் தொகையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கைகளுக்கு ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.