கொரோனாவின் இரண்டாவது அலை வடக்கில் ஏற்படும் பேராபத்து!

north province
north province

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்படலாம் என்றும் அவ்வாறு ஏற்பட்டால் வடக்கிலேயே அந்த ஆபத்து நிகழக்கூடும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. 

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இலங்கையின் வட பகுதிக்கு வரும் வியாபாரிகளால் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறான நிலை ஒன்று உருவாகுமானால் அது பெரும் ஆபத்துக்களை விளைவிக்கும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. 

கொரோனா வைரஸின் முதல் அலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், இரண்டாவது அலை இந்தியாவின் வாயிலாக ஏற்படலாம் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா குறிப்பிட்டார். 

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அங்கிருந்து வரும் நபர்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் இலங்கையில் பாரிய அழிவுகள் ஏற்படும் நிலை வரலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.