கணவனின் பணியை செய்யவே விரும்புகிறேன் ;சசிகலா ரவிராஜ்

20200615 122417
20200615 122417

தனது கணவர் தேசியம் சார்ந்த கொள்கையோடு இருந்தவர் எனவும் அவரது பணி எவ்வாறு விடுபட்டதோ அதிலிருந்து தான் கொண்டு செல்லவே விரும்புகிறேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திருமதி சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே திருமதி சசிகலா ரவிராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எனது கணவர் மாமனிதர் ரவிராஜின் இறப்புக்கு பின் சாவகச்சேரி, அதாவது தென்மராட்சி தொகுதியிலிருந்து அதிக காலமாக, கடந்த 14 வருடங்களாக பிரதிநிதித்துவம் அதந்த தொகுதியிலிருந்து இருக்கவில்லை.

அது ஒரு காரணமாகவும் மற்றும் நானும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் பாதிக்கப்பட்ட பெண்களின் வலியையும் வேதனையையும் மிகவும் உனர்ந்தவர் என்ற வகையில் அவர்களுக்காகவும், எனது கணவர் செய்த சேவையை தொடர்வதற்காக இந்த தேர்தலில் போட்டியிட வந்திருக்கின்றேன்.

அதாவது நான் அறிந்த வகையில் யாழ் .மாவட்டத்தில் கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் கானப்படுகின்றன.

அவர்கள் சார்பாகவும் கடந்த காலங்களில் ,அவர்களுடைய எந்தவித தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை. செய்யப்பட்டவையும் மிக குறைவே என்று சொல்லலாம்.

அவ்வாறான நிலையில் எனது முக்கிய நோக்கம் அவர்களுக்கும் பாதிக்கப்பட்ட எந்தவகையான குடும்பங்களுக்கும் அத்தோடு பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும். நான் அந்த வலியை உணர்ந்தபடி அதாவது அந்த பிரச்சனை இருந்தது.

இருந்தாலும் பொருளாதார ரீதியாக நான் ஒரு நிரந்தர தொழிலை செய்தபடியால் எனக்கு பொருளாதாரப் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. ஆனால் இது எல்லாத்தையும் விட இங்கு உள்ள குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு சமூக சீரழிவுகள் எல்லாவற்றையும் தொடர்ந்து ஒரு கட்டமைப்புக்குள் அவர்கள் சீவித்து வருகிறார்கள்.

அது ஒரு பாரதூரமான பிரச்சனைகள், கலாச்சாரம் எல்லாமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக நான் எனது இந்த சந்தர்ப்பத்தை பிற்காலத்தில் பயன்படுத்துவேன் என்று நினைக்கின்றேன்.

இது தவிர சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடைய சார்பாகவும் எனது ஈடுபாடு காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இதைத் தவிர எனது அனைத்து கட்சி அங்கத்தவர்களுடன் நான் கூட்டாக சேர்ந்து செயற்படுவேன்.

நான் ஒரு இயற்கை வளம் சமூகம் போன்ற அமைப்புகளில் ஈடுபாடு உள்ளவர் என்ற படியால் அவற்றோடு சேர்ந்து நடவடிக்கைகள் கடற் தொழில் மற்றும் விவசாயம் போன்றவற்றில் ஊக்குவிப்பதற்கான சேவைகளை செய்வேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

எனது வெற்றிவாய்ப்பு சாதகமாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன், அதனை நம்புகின்றேன். அதாவது எனது கணவருடைய சேவையை அனைவரும் ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அவருடைய சேவையை தொடர இருக்கின்றேன்.

அது நிறைவேற்றப்பட வேண்டும் அதே நேரத்தில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் என்ற வகையில் தமிழ் கட்சியை சார்ந்த ஒருவராக இருப்பதாலும், எமது பிரச்சனைகள் எமது நோக்கங்கள் எல்லாம் எமது கட்சிகளில் ஒன்றின் ஊடாக நிறைவேற்றப்படவேண்டும்.

அது ஒரு முக்கிய கொள்கையாக நான் கொள்கிறேன் அந்த காரணத்தினாலும் எனக்கு எல்லா பெண்களும் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் அது ஒரு தேவையும் கூட.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று சொல்லும் போது அங்கு தேசியம் காணப்படுகிறது. மற்றும் எனது கணவர் தேசியம் சார்ந்த கொள்கையோடு இருந்தவர் அவரது பணி எவ்வாறு விடுபட்டதோ அதிலிருந்து நான் கொண்டு செல்லவே விரும்புகிறேன்.

நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை அதைபற்றிய விளக்கம் கூற விரும்பவில்லை. ஆனாலும் மனிதர் என்ற வாக்கியம் அவருக்கு கொடுக்கப்பட்டது அது அவருக்குக் கொடுக்கப்பட்டது.

அதனை அகற்றுவதற்கும் அதனை இல்லாமல் செய்வதற்கும் உரிய தகுதி எங்களுக்கு இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.

மூன்று விருப்பு வாக்குகள் கட்டாயம் எனக்கு ஒன்று கிடைக்க வேண்டும் ஏன் என்றால் தென்மராட்சியில் ஒரு பிரதி நிதித்துவம் இருக்க வேண்டும் மற்றவர்களுக்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது அது அவர்களுக்கு என்ன காரணத்தினாலோ இல்லாமல் போய்விட்டது.

ஐந்து ஐந்து வருடங்களாக இரண்டு தடவை இது மூன்றாவது தடவை இது எனக்குரிய சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.