தேசிய உணவு பாதுகாப்பு வாரம்!

0 mnj
0 mnj

உணவு பழக்கவழக்கத்தை சரியான முறையில் கையாளாமையால் உலகில் நாள் ஒன்றுக்கு நானூறு (400) பேர் மரணிப்பதுடன், அதில் ஐந்து வயதிற்கு குறைந்த குழந்தைகள் மரணிப்பது நாற்பது (40) வீதம் என கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தெரிவித்தார்.

தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள உணவு விற்பனைகளை மேற்கொள்ளும் உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு சனிக்கிழமை மாலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

உரிய பாதுகாப்பு முறையற்ற உணவு பழக்கவழக்கத்தின் மூலம் வருடத்திற்கு அறுநூறு மில்லியன் பேர் நோயாளிகளாக மாறுகின்றனர்.

உலகத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் பத்தில் ஒருவர் நோளியாகின்றனர். இதில் வருடத்திற்கு நான்கு இலட்சத்து இருபதாயிரம் பேரும், நாள் ஒன்றுக்கு நானூறு பேர் இறப்பதுடன், அதில் ஒரு இலட்சத்தி இருபதாயிரம் குழந்தைகள் என்பது கவலையான விடயமாகும்.

பக்ரீரியா, பங்கஸ், வைரஸ் மற்றும் கெமிக்கல் மூலமாக உணவுகள் நஞ்சாக மாறுகின்றது. இதற்கு நாம்தான் காரணம் நாம் ஒவ்வொருவரும் தொழில் செய்ய வேண்டும் அதற்கு மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

ஆனால் அதனை அரசாங்கம் விதித்துள்ள சுகாதார முறைப்படி கடைப்பிடிப்போமானால் எதிர்காலத்தில் பாதுகாப்பற்ற முறையற்ற முறையிலான உணவு பழக்கவழக்கத்தினால் ஏற்படும் மரணங்களை குறைத்துக் கொள்ள முடியும். அதற்கு அதனுடன் சம்மந்தப்பட்ட அனைவரும் உழைக்க வேண்டும்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி தயாரிக்கும் இடங்களில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்களும் இரத்து செய்யப்பட்டு வர்த்த நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை வழங்கினர்.