அம்பாறை தமிழ் மக்கள் சோரம் போகமாட்டார்கள் – தவராசா கலையரசன்

9 dd 0
9 dd 0

தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக அனைத்து தரப்பிலும் புத்திஜீவிகள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் பாடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இலக்கம் 5 இல் போட்டியிடும் இவர் அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில்இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுகின்றேன். குறிப்பாக தமிழர்கள் அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பிரஜையாக வாழ்ந்துவரும் சூழ்நிலையில் இந்த தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தலாகும்.

இன்றைய காலகட்டதில் தமிழர்கள் விழிப்பாக செயற்பட வேண்டும். பல கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தமிழர்களின் வாக்குகளை சின்னாபின்னமாக்க இல்லாதொழிக்க பல நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

குறிப்பாக தமிழ் மக்களிடையே பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன அவை நியாய பூர்வமாக இருந்தாலும் இவர்களின் சூழ்ச்சிகளை கண்டு நாம் தள்ளி நிற்க முடியாது அவ்வாறு போனால் பலமற்ற சமூகமாக மாறிவிடுவோம். அந்த அடிப்படையில் எமக்கு சாதகமாக பயன்படுத்தி எமது இருப்பை காப்பற்ற வேண்டும். இவ்வாறான சந்தர்பத்தை நழுவ விட கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார் .