சுமந்திரன் கலந்து கொள்ளவிருந்த கூட்டம் சார்ள்ஸின் கடுமையான எதிர்ப்பால் இரத்து!

suma sarls
suma sarls

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் கலந்து கொள்ளவிருந்த கூட்டம் ஒன்று, வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் எதிர்ப்பால் இரத்து செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வன்னியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று சந்திக்கவிருந்தார். 

இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜாவுடன் எம்.ஏ. சுமந்திரனும் கலந்து கொள்ளவிருந்த திட்டமிடப்பட்டது. எனினும் வன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸின் எதிர்ப்பால் குறித்த கூட்டம் இரத்து செய்யப்பட்டது. 

குறித்த கூட்டத்தில் சுமந்திரன் கலந்து கொண்டால், தாம் பங்கெடுக்கப்போவதில்லை என்று சார்ள்ஸ் கூறியிருந்தார். 

கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அதன் தலைமைக்கும் எதிராக சுமந்திரன் கருத்து தெரிவித்தமையினாலேயே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.