“பச்சைப்பசும் கிளிநொச்சி” என்னும் தலைப்பில் மரம் நடுகைசெயற்றிட்டம் ஆரம்பம்

IMG 2752
IMG 2721 1
IMG 2717

பச்சைபசும் கிளிநொச்சி எனும் தலைப்பில் மரம் நடுகைசெயற்றிட்டம் ஒன்று இன்று (17-06-2020) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

IMG 2701
IMG 2715

கிளிநொச்சிநகர றோட்டறிக் கழகத்தினரால்  பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பூங்காவனச் சந்தியிலிருந்துபன்னங்கண்டிவரை முதற்கட்டடமாக ஒருகிலோ மீற்றருக்கு வீதியின் இரு புறமும் சுமார் 400 தேக்குமரக் கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மரம் காடழிப்பு என்பவற்றால் சூழல் மிகமோசமாக பாதிப்படைந்து வருகின்ற சூழலில் கிளிநொச்சிநகர றோட்டறிக் கழகத்தின்  இச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சூழலை நேசிக்கின்றவர்களின் பலத்தவரவேற்பைபெற்றுள்ளது.

IMG 2759

அந்தவகையில் இன்றுகாலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள முதற்கட்டமான பச்சைப்பசும் மரம் நடுகைசெயற்றிட்டத்தை கிளிநொச்சிமாவட்டஅரசஅதிபர்  திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஆரம்பித்துவைத்துள்ளார்.

IMG 2773

இச் செயற்றிட்டத்தின் தொடடர்ச்சிவரும் காலங்களில் தொடராக இடம்பெறும் எனவும், இது  தனியே ஒருதரப்பினால் மட்டும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என்பதனால்  நீர்ப்பாசனத்திணைக்களம், வனவளத்திணைக்களம், பிரதேச சபை, பிரதேசசெயலகம், வீதிஅபிவிருத்திஅதிகார சபை, மின்சார சபை, மத்தியசுற்றாடல் அதிகார சபை ஆகிய திணைக்களுடன் இணைந்து கிளிநொச்சிநகர றோட்டறிக் கழகம் இச் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.
றோட்டறிக் கழகத்தின் தலைவர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்றநிகழ்வில்  அரசஅதிபர் ,பிரதேசசெயலர், பொலீஸ் அதிகாரி, உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.